சில சமயம் முன்னேற முயற்சி பண்ணும்போது இப்படியும் நடக்கலாம்!
Home > தமிழ் news
ஆனால் இங்கு ஒரு நாய்க்குட்டி தன்னை வளர்க்கும் எஜமான சிறுவனின் சட்டையைப் பிடித்து இழுத்தபடி செய்யும் சேட்டைகளைக் கண்டால் வீட்டில் நாய்க்குட்டி வளர்க்கும் ஆசை பலருக்கும் உண்டாகும். அந்த அளவுக்கு சுட்டித்தனம் செய்யும் இந்த நாய்க்குட்டி முழங்கால் அளவு கூட இல்லை.
கருப்பு வெள்ளை கலந்த இந்த பப்பி நாய்க்குட்டி, தன் போலவே ஒரு பால்யக் குழந்தையிடம் விளையாடும் இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மாறுவேடச் சுற்றுக்கு ஆடையணிந்தது போல் வேடமிட்டிருக்கும், குழந்தையைப் பிடித்து இழுத்து விளையாண்டிக் கொண்டிருக்கும் நாய்க்குட்டியையும் மீறி சோபாவில் அமர்ந்துவிட வேண்டும் என ஏற முயற்சிக்க, நாய்க்குட்டியிடம் குழந்தை படும் பாட்டை பார்த்து சிரிக்காதோர் இல்லை. இருப்பினும் விடாமுயற்சி செய்யும் குழந்தைக்குத்தான் அனைவரும் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கின்றனர்.
Try not to laugh (🔊on) pic.twitter.com/JC8Rh0uYvy#MrGreat #MrGreatViral #ViralVideos
— Mr Great Viral (@mrgreatviral) October 8, 2018