'இவர் மட்டும் தான் சொன்னதை செஞ்சாரு'...ரசிகர்களின் பாராட்டு மழையில் இந்திய வீரர்!

Home > தமிழ் news
By |
'இவர் மட்டும் தான் சொன்னதை செஞ்சாரு'...ரசிகர்களின் பாராட்டு மழையில் இந்திய வீரர்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முன்னணி வீரர்கள் தடுமாறிய நிலையில், புஜாரா சதம் அடித்து அசத்தியுள்ளார்.

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் இன்று தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர்கள் தங்கள் விக்கெட்டை இழந்து சீட்டுக்கட்டை போல் சரிந்தார்கள்.ராகுல் 2, முரளி விஜய் 11, கோலி 3, ரஹானே 13 என சொற்ப ரன்னில் தங்கள் விக்கெடினை இழந்து நடையை கட்டினார்கள்.

 

ஆனால் மற்றோரு புறம் நிலைத்து நின்று ஆடிய புஜாரா,ரோகித் சர்மா 37, பண்ட் 25, அஸ்வின் 25 ஆகியோருடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தார்.இதனால் 246 பந்துகளில் 2 சிக்ஸர் 7 பவுண்டரி விளாசி 123 ரன்களை எடுத்து,ஆட்டமிழந்தார். இது டெஸ்ட் தொடரில் புஜாரா அடித்த 16வது சதம் ஆகும்.65வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் புஜாரா இதுவரை 3 முறை 200 ரன்கள், 16 சதம், 19 அரைசதம் அடித்து 5000 ரன்களை கடந்துள்ளார்.

 

போட்டி தொடங்குவதற்கு முன்பு சாதிப்போம் எனக் கூறிய எந்த வீரரும்,சிறப்பாக விளையாடாத நிலையில், புஜாரா மட்டும் தான் சொன்னதை செய்தார்,என ரசிகர்கள் ட்வீட் செய்து வருகிறார்கள்.

CRICKET, BCCI, PUJARA, INDIA VS AUSTRALIA, 1ST TEST, CHETESHWAR PUJARA