வெள்ள நிவாரணம்.. புதுச்சேரி மாநிலம் ரூ. 1 கோடி நிதியுதவி!
Home > தமிழ் newsகேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழையினால் வெள்ளம் பெருக்கெடுத்து, கேரளாவை தண்ணீரில் மிதக்க வைத்துக்கொண்டிருக்கிறது. மத்திய அரசிடம் கூடுதல் பேரிடர் மேலாண்மை மீட்புப் படையினரின் உதவியைக் கோரிய கேரள அரசு பெரும்பாலான மக்களை மீட்டு வருகிறது.
இயல்புவாழ்க்கை முடங்கிய கேரளாவின் சில பகுதிகளில் இடுக்கி அணை திறந்துவிடப்பட்டதால், நீர்வரத்து அதிகமாகி வீடுகள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் இணையத்தில் வந்தபடி உள்ளன. கேரளாவின் பாதிக்கப்பட்ட பகுதிகளை கேரள முதல்வர் பினராய் விஜயன் பார்வையிட்டு வருகிறார்.
முன்னதாக மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக அரசு 5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ள நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு புதுச்சேரி அரசு சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது, பேரிடர் கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருந்துகள், துணிகள், அரிசி போன்றவற்றையும் கொடுத்துதவ முன்வரவேண்டும் என்று மாநில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் பேசிய அவர், கேரளாவும் நம் சகோதரத்துவ மாநிலம்தான் என்று கூறியுள்ளார்.