சிவா, ஐஸ்வர்யா மேனன்,திஷா பாண்டே,சதீஷ்,சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள படம் தமிழ்படம் 2.0. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

இந்த நிலையில் இயக்குநர் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்படம் 2.0 படத்தைப் பார்த்த தயாரிப்பாளரின் நிலைமை இதுதான், என வொய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

 

தலையில் கையை வைத்துக்கொண்டு சசிகாந்த் அமர்ந்திருக்கும் இப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

BY MANJULA | JUN 20, 2018 3:19 PM #TAMIZHPADAM2 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS