3 மாணவிகள்.. 3 ஆண்டுகளுக்கு பின் நீதி..தனி ஒரு ஆசிரியையின் போராட்டம்!

Home > தமிழ் news
By |
3 மாணவிகள்.. 3 ஆண்டுகளுக்கு பின் நீதி..தனி ஒரு ஆசிரியையின் போராட்டம்!

இந்தியா சுதந்திரம் அடைந்து  72 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.  நாம் இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் தேசிய தாய் என்று பாரதமாதாவை அழைக்கிறோம். பொதுவாகவே இந்தியாவின் மிக முக்கியமான முதுகெலும்பாக பார்க்கப்படுபவர் பெண்தான். ஆனால் இந்தியாவில் பெண்களுக்கு எந்த அளவுக்கு பாலியல் சுதந்திரம் இருக்கிறது? பாதுகாப்பு உணர்வு இருக்கிறது? கிரிமினல் அச்சுறுத்தல்களிலிருந்து தப்பிப்பதற்கான வழிகள் இருக்கின்றன? பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை சட்டம் சாராத ஒழுங்குமுறை கட்டமைப்புகள் என்ன இருக்கின்றன? என்பன போன்ற விவாதங்கள் நாளும் நாளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதற்கேற்றார்போல் பாலியல் அச்சுறுத்தல்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

 

இவ்வளவு சிக்கல்களுக்கும் இடையில்தான் மும்பையை சேர்ந்த ஆசிரியை அந்தேரி பள்ளியில் பாதிக்கப்பட்ட 40 மாணவிகளுக்கும் நீதியை பெற்றுத் தந்திருக்கிறார். மும்பையின் அந்தேரி பள்ளியில் அழகாய் படித்துக் கொண்டிருந்த அந்த மூன்று மாணவிகள் தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தின் அருகில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுவதும், தங்கள் கைகளில் தண்ணீர் ஊற்றி வைத்து விடும் வழக்கமாக இருந்தது. காரணம் அவற்றை சாக்காக வைத்துக் கொண்டு ஆசிரியர் அவர்களின் அருகில் வந்து அமர்ந்து விடக்கூடாது என்பதற்காக.

 

இருப்பினும் பதின்பருவ மாணவிகளிடம் அதிகாரப் போக்கிலான பாலியல் துஷ்பிரயோகம் செய்த அந்த ஆசிரியருக்கு எந்த தண்டனையும் கிட்டவில்லை.  நேரடியாக பாதிக்கப்பட்ட மூன்று மாணவிகளின் வாக்குமூலங்களை வைத்துக்கொண்டுதான் அந்தேரி பள்ளியின் முதல்வராக இருந்த பெண்மணி அந்த ஆசிரியரை விசாரிக்க தொடங்கினார்.  பின்னர் அந்த 3 பெண்கள் கொடுத்த துணிச்சலில் அடுத்தடுத்து 40 பெண்களும் தங்கள் பாதிப்புக்குள்ளாகி அதை பள்ளி முதல்வரான அந்த பெண்மணியிடம் வந்து நம்பிக்கையோடு கூறினர்.‌

 

ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரோ, பள்ளி முதல்வர் தன் மீது உள்ள கர்வத்தில் தன்னை பழிவாங்குவதற்காக 40 பள்ளி மாணவிகளையும் தூண்டிவிட்டு தனக்கு எதிராக புகார்களை சேகரித்துள்ளார் என்றும் ஒரு ஆசிரியர் மாணவிகளை தொட்டுப் பேசுவது தவறான புரிதலோடு பார்ப்பது முறையானது அல்ல என்றும் சமாளிக்கிறார்.

 

இருப்பினும் அந்த ஆசிரியை தன் தீராத முயற்சிக்கு பிறகு சிறுசிறு நீதிமன்றங்களைத் தாண்டி சுப்ரீம்கோர்ட்டில் சென்று மாணவிகளுக்கு தகாத வீடியோக்களை அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரின் உண்மை முகத்தை தோலுரித்து,  ’பாஸ்கோ’ சட்டத்தின் கீழ், 3 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த திங்கள் கிழமை (ஆகஸ்டு 13) கடுங்காவல் தண்டனையை வாங்கிக் கொடுத்தார்.

 

இந்த தண்டனையை பெற்றுக் கொண்டு அதையும் தாண்டி, இது போன்ற  தவறுகள் நிகழ்வதையும் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியர்களே, இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதையும் இனியும் அனுமதிக்கக்கூடாது என்பதற்காகத்தான் இந்த நீதி வேண்டி இருக்கிறது என்று பேசிய ஆசிரியை, தான் பள்ளி முதல்வர் பதவியிலிருந்து விலக்கப்பட்டதாகவும் இந்தக் குற்றங்கள் நிகழ்ந்த 2014ம் ஆண்டு முதல் தற்போது வரை தனக்கு சம்பள பாக்கியை கூட தராமல் முடக்கி வைத்திருக்கும் பள்ளியில் மீண்டும் பணிபுரிய தொடங்கியிருப்பதையும் கூறுகிறார். அவருக்கு சம்பள பாக்கியைத் தர உத்தரவு பிறப்பித்துள்ளது கோர்ட் என்றாலும், தனக்கும் அந்த பள்ளி ஆசிரியருக்கு சார்பாக பேசிய மற்ற ஆசிரியர்களுக்குமான பனிப்போர் தொடர்ந்தபடியேதான் என்றும் கூறியுள்ளார். 

 

இந்த வழக்கு நடைபெற்ற இடைக்காலத்தில் பள்ளி முதல்வராக இருந்த ஆசிரியை சத்திரங்களிலும், சர்ச்சிலும், நண்பர்களின் அறையிலும், மாறி மாறி தங்கி, துன்பப்பட்ட கதை எல்லாம் இந்த நீதிக்கு பின் இருக்கிறது. எனினும் இந்த மாணவிகளுக்கு நீதி வாங்கிக் கொடுத்தது தன் வாழ்க்கைக்குப் போதுமானதாக கருதுகிறார் அறத்தோடு வாழும் இந்த ஆசிரியை! #ஆசிரியப்பணி_அறப்பணி!

SEXUALABUSE, MUMBAIPRINCIPALSTORY, MUMBAIJUSTICESTORY, JUSTICEFORHARRESMENT