சி.எஸ்.அமுதன் இயக்கியிருக்கும் 'தமிழ்படம் 2.0' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக அகில உலக சூப்பர்ஸ்டார் சிவாவின் அறிமுகப்பாடலான 'நா யாருமில்ல' பாடலை, இதுவரை 28 லட்சத்துக்கும் அதிகமான பேர் யூடியூபில் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்தநிலையில் படத்தின் வெளியீடு குறித்து இயக்குநர் சி.எஸ்.அமுதன் மறைமுகமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதில் அவர், ''ஜூலை 13-ஆம் தேதி எனக்கு மிகவும் பயங்கரமானது, அந்த தேதியில் என்ன மறைந்திருக்கிறது என்று தெரியவில்லை, காத்திருங்கள்,'' என தெரிவித்துள்ளார்.
இதனால் ஜூலை 13-ம் தேதி தமிழ்படம் 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BY MANJULA | JUN 30, 2018 1:08 PM #TAMILPADAM2 #தமிழ் NEWS
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS