விமான நிர்வாகம் செய்த காரியத்தால் கையில் பணமின்றி அழுத கர்ப்பிணி பெண்!
Home > தமிழ் newsபிரிட்டனைச் சேர்ந்த 20 வார கர்ப்பிணி பெண்ணை, விமான நிர்வாகம் நள்ளிரவில் இறக்கிவிட்டதால், கையில் பணமின்றி தவித்து, விமான நிலையத்திலேயே நின்று அழுதுள்ள சம்பவத்தினால், விர்ஜின் அட்லாண்டிக் விமான நிர்வாகத்தின் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, நிர்வாகம் தன்னிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் 28 வயதான அந்த பெண்.
தனது உறவுக்கார பெண் மற்றும் தோழியுடன் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டு, மான்செஸ்டர் திரும்பிய கர்ப்பிணி பெண், பில்லி ஜோ ராபின்சனுக்கு ஜேஎஃப்கே விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதற்கு 40 நிமிடங்களுக்கு மேலானாதால், உடலின் வெப்பநிலை அதிகரித்து உபாதை கொடுத்துள்ளதால், வாந்திக்கான அறிகுறி தென்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அவரை விமானத்தில் பயணிக்க அனுமதிக்காத விமான ஊழியர்கள், நள்ளிரவு 1 மணி என்று பாராமல், மருத்துவ பரிசோதனையை காரணம் சொல்லி, இறக்கிவிட்டுள்ளனர். ஆனால் பில்லியின் டெபிட் கார்டுகள் உள்ளிட்ட பைகளை அவரிடம் ஒப்படைக்க மறந்ததால், நள்ளிரவு 1 மணிக்கு கையில் பணமின்றி தவித்ததோடு, விமான நிலையத்தில் நின்றபடி அழுதுள்ளார் அந்த கர்ப்பிணி பெண்மணி.
ஒருவழியாக தனது பயண காப்பீடு மூலம் அறையை எடுத்து தங்கியதோடு, விமான நிலையத்தில் புகார் அளித்த பின்னர், அடுத்த விமானத்தின் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் தன்னை எந்த மருத்துவரும் பரிசோதிக்கவுமில்லை என்று கூறியுள்ளார். வாடிக்கையாளர் மீதான அக்கறையற்ற இந்த செயலால் தன்னிடம் நிர்வாகம் மன்னிப்பு கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.