‘என்னா எனர்ஜி’.. சிசேரியன வெச்சிக்கிட்டு டாக்டருடன் டான்ஸ் போடும் கர்ப்பிணி பெண்.. வைரல் வீடியோ!
Home > தமிழ் newsகர்ப்ப காலத்தில் 9 மாத கர்ப்பிணி பெண்ணும், அவருக்கு மருத்துவம் பார்க்கும் பெண் மருத்துவரும் இணைந்து ஆட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதோடு அந்த கர்ப்பிணி பெண்ணின் உற்சாகம் பலரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
பேறு காலத்தில் குழந்தையின் ஆரோக்கியம் என்பது தாயின் மனநிலையைப் பொறுத்தும் அமையும். அப்படி ஒரு தாய்தான், பஞ்சாபின் லூதியானா நகரத்தில் சிசேரியன் ஆபரேஷன் செக்ஷனில் குழந்தை பேறுக்கான சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும்போது தனது மருத்துவருடன் சேர்ந்து டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் செய்து வைரலாகியுள்ளார்.
ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது குழந்தையை இன்னும் ஓரிரு மாதங்களில் பெற்றெடுக்கப்போகும் மகிழ்ச்சியுடன் உற்சாகமாக ஆடும் சங்கீதா ஷர்மா என்கிற இந்த தாய்க்கு விரைவில் சிசேரியன் நடக்கவுள்ளது. அதற்காக சி-செக்ஷனுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதுபோன்று பேறு காலத்தில் மெலிதாக ஆடுவது என்பது ஒருவகையான உடற்பயிற்சி என்றும் சங்கீத ஷர்மா தெரிவித்துள்ளார்.
அதே நேரம், தான் அடிப்படையில் ஒரு நடன இயக்குநர் என்பதாலும் தான் உண்ணும் உணவு மற்றும் தனது உடல்வாகு எல்லாமும்தான் இந்த அளவுக்காவது ஆட முடிவதற்கான காரணம் என்றும், அதனால் இதனை எல்லாரும் முயற்சி பண்ணுவதென்பது உகந்த காரியமல்ல என்று சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.
Just a few minutes before the C-section delivery, the Doctor and the patient perform a nice jig. This happened in Ludhiana. pic.twitter.com/ZOlzIhbQ8c
— Harsh Goenka (@hvgoenka) December 28, 2018