'சிலைக்கடத்தல் வழக்கில் முக்கிய திருப்பம்'.. சிபிஐக்கு வழக்கை மாற்ற தமிழக அரசு முடிவு!
Home > தமிழ் newsசிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக தமிழக கோவில்களில் காணாமல் போன சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.இதற்கு முக்கிய காரணம் ஐஜி பொன்.மாணிக்கவேல்,இவர் சிலை தடுப்பு பிரிவுக்கு ஐஜியாக வந்த பிறகு தான் பல ஆதிரடி நடவடிக்கைகள் மூலம் காணாமல் போன பல கோவில்களின் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இவற்றில் மிக முக்கியமானதாக கருதப்படுவது குஜராத் மியூசியத்திலிருந்து மீட்கப்பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் உலகமாதேவி சிலைகள்.இவற்றின் மதிப்பு சுமார் 100 கோடிக்கும் மேல் இருக்கும்.மேலும் தமிழகத்தில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகளை இவர் தலைமையிலான குழு மீட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மத்தியிலும் ஐஜி பொன்.மாணிக்கவேல் மற்றும் அவரது குழுவினர் வெகுவான பாராட்டை பெற்றார்கள்.
இந்நிலையில் காணாமல் போன சிலைகளுக்கும் இந்து அறநிலைய துறையை சேர்ந்த சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக சில முன்னாள் மற்றும் இன்னாள் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டார்கள்.இதனால் பல அதிகாரிகள் கலக்கத்தில் இருந்தார்கள்.
இந்த சூழ்நிலையில் 'சிலைக் கடத்தல் வழக்குகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரிப்பதில் தமிழக அரசுக்குத் திருப்தி இல்லை' என்றும் இதனால் சிலைக் கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.இது தொடர்பான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.