மனைவியின் நாக்கை வெட்டி வீட்டுக்காவலில் வைத்த போலீஸ் கான்ஸ்டபிளின் மகன்!
Home > தமிழ் news
என்னதான் டிஜிட்டல் வந்தாலும், இன்னும் வரதட்சணை கொடுமைகள் நிகழவே செய்கின்றன என்பதற்கு உதாரணமாக மீண்டும் மூர்க்கத்தனமான சம்பவங்கள் நிகழ்ந்தேறிக்கொண்டே இருக்கின்றன.
அப்படித்தான் அண்மையில் உத்திர பிரதேசம் மாநிலத்தில் கான்பூரைச் சேர்ந்த ஆகாஷ் என்பவர், தன் மனைவியை வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்த கணவர், ஒரு கட்டத்தில் வாக்குவாதத்தி ஈடுபட்டுள்ளார். மனைவியுடனான வாக்குவாதத்தில் கொதித்து எழுந்தவர், கோபத்தில் அதிகம் பேசியதாகச் சொல்லி தன் மனைவியின் நாக்கை வெட்டியுள்ளார்.
கடந்த நவம்பர் 6-ம் தேதி நிகழ்ந்த இந்த கொடூரச் சம்பவத்துக்கு பிறகும் ஆகாஷ் தன் மனைவியை வீட்டுக்காவலில் வைத்திருந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்னரே வெளிவிடப்பட்ட ஆகாஷின் மனைவி இதுபற்றி தன் வீட்டார் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் ஆகாஷின் மீது எடுக்கப்படவில்லை. காரணம் ஆகாஷ் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளின் மகன் என்பதுதான்.
இந்த நிலையில், அந்த பகுதியின் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகாஷின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளார்.