மத்திய அமைச்சர் ராஜய்வர்த்தன் சிங் ரத்தோர் தான் புஷ் அப்ஸ் செய்யும் வீடியோவை கடந்த மாதம் ட்விட்டரில் பகிர்ந்து, இதுபோன்று எல்லோரும் தங்களது பிட்னஸ் மந்த்ரா வீடியோவைப் பகிரவேண்டும் எனக் கோரியிருந்தார்.மேலும் தனது ட்வீட்டில் அவர் விராட் கோலி, ஹிருத்திக்ரோஷன்,சாய்னா நேவால் ஆகியோரையும் டேக் செய்திருந்தார்.
இந்த சவாலை ஏற்ற விராட் தான் புஷ்அப்ஸ் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.மேலும் இதேபோல பிரதமர் மோடி, தோனி மற்றும் எனது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.இதைத்தொடர்ந்து விராட்டின் சவாலை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில், விராட் கோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.மேலும், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற மணிகா பத்ரா ஆகியோருக்கு மோடி பிட்னஸ் சவால் விடுத்துள்ளார்.
இதுதவிர துணிச்சலான ஐ.பி.எஸ் அதிகாரிகள், குறிப்பாக 40 வயதுக்குமேல் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் மோடி பிட்னஸ் சவால் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Watch: Virat Kohli insures his beard!
- Work for only Hindus who voted for us, not Muslims: Karnataka BJP leader
- ரசிகர்களால் 'சோதனைக்கு' ஆளான விராட் கோலி
- 'இந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்லாதீங்க'..வெதர்மேன் எச்சரிக்கை!
- விராட் கோலிக்கு 'பதிலடி' கொடுத்த அனுஷ்கா... வைரல் வீடியோ!
- Protests in Karnataka spoils Kaala release
- HD Kumaraswamy expands cabinet, 25 ministers inducted
- உலகிலேயே 'அதிக ஊதியம்' பெறும் வீரர்கள் பட்டியலில்... இடம்பிடித்த ஒரே இந்தியர்!
- தடைகளைத் தாண்டி 'கர்நாடகாவில்' வெளியாகிறது காலா
- Rajinikanth appeals to Karnataka in Kannada to provide security at theatres