‘எய்ம்ஸ் தமிழகத்துக்கு பயன்படும்:மோடி’..ட்ரெண்டிங்கில் #GoBackModi2 ஹேஷ்டேக்!

Home > தமிழ் news
By |

மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில்  எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த அடிக்கல் நாட்டு விழாவில் ஆளுநர், முதல்வர், துணைமுதல்வர், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

‘எய்ம்ஸ் தமிழகத்துக்கு பயன்படும்:மோடி’..ட்ரெண்டிங்கில் #GoBackModi2 ஹேஷ்டேக்!

இன்று காலை 11:30 மணியளவில் பாரத பிரதமர் மோடி, மதுரை மண்டேலா நகரில் (தோப்பூரில்) அமையப்பெற இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தந்தார். முன்னதாக மதுரைக்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்திக் கொள்வதாக கேட்டு செலுத்தினார்.

நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கும் மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்பதே தங்கள் இலக்கு என்று குறிப்பிட்டார். அதுமட்டுமல்லாமல், விரைவில் ஸ்மார்ட் சிட்டியாகவுள்ள, தமிழகத்தின் உள் மாநகரமான மதுரையில் இப்படியான உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் தமிழ்நாட்டு மக்கள் பெருமளவில் பயன் பெறுவார்கள் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்த நிலையில் ட்விட்டரில் அவரின் வருகை குறித்து #TamilnaduWelcomesModi , #tnwelcomesmodi,  என்பன போன்ற ஆதரவும், #GoBackModi, #GoBackModi_2PointO போன்ற எதிர்ப்புமாக பலவிதமான ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன. பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தினர் மதுரையில் கருப்பு பலூன்கள்  பறக்கவிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பெரியார் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திருமுருகன் காந்தி, முகிலன் உட்பட 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். பிரதமர் மோடி இதுவரை தமிழ்நாட்டுக்கு எத்தனையோ முறை வருகை தந்திருந்தாலும், #GoBackModi என்கிற ஹேஷ்டேக் இரண்டாவது முறை ட்ரெண்டாகியுள்ளதால், #GoBackModi2  என்று பதிவிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

GOBACKMODI, AIMS, MADURAI, HOSPITAL, #TNWELCOMESMODI