கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான் புஷ்அப்ஸ் செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இதேபோல பிரதமர் மோடி, தோனி மற்றும் எனது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பதிலுக்கு பிரதமர் மோடி "சவாலை ஏற்றுக்கொள்கிறேன் விராட். விரைவில் எனது உடற்பயிற்சி வீடியோவை ட்விட்டரில் பகிர்கிறேன்,'' என தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில் மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் தலைவருமான அபிஷேக் மனு சிங்வி, "தமிழ்நாடு முதல்வராகத் தொடர பழனிச்சாமிக்கு தகுதி உள்ளதா?. இது பிரதமர் மோடிக்கு எங்களின் மற்றொரு ஃபிட்னஸ் சவால். சவாலை ஏற்கவும், பதிலுக்கு சவால் விடுக்கவும் பிரதமர் மோடிக்கு நேரம் நிறைய உள்ளது. ஆனால் வன்முறைகளையும், எரிபொருள் விலையையும் பற்றிப்பேச நேரம் இல்லை,'' என கடுமையாகச் சாடியுள்ளார்.


முன்னதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எரிபொருள் விலையைக் குறைக்குமாறு மோடிக்கு சவால் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS