விஜய்யின் 62-வது படமான சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று முன்தினம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தநிலையில், சர்கார் திரைப்படத்தில் நடிகர் விஜய் புகைக்கும் காட்சி நீக்கப்பட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், ''கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரித்து நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் என்ற தலைப்பிலான திரைப்படத்தில் முதல் சுவரொட்டி இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் விஜய் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது போன்று இடம் பெற்றிருக்கும் காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைப்பதைவிட மோசமான இச்செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
இதன்மூலம் படத்தின் நாயகன் விஜய் முதல் படக்குழுவினர் வரை தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்தியை சொல்ல வருகின்றனர்? புகைப்பது உடலுக்கும், உடல் நலனுக்கும் தீங்கானது என்று சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி, உலக சுகாதார நிறுவனம் வரை அனைவரும் அறிவுறுத்தி வரும் நிலையில், விஜய் புகைக்கும் காட்சியைப் பார்க்கும் சிறுவர்கள் புகை நல்லது என நினைத்து அப்பழக்கத்துக்கு அடிமையாகி விட மாட்டார்களா? இதுதான் தமது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் காட்டும் நல்வழியா? சர்ச்சையை ஏற்படுத்தி அதன் மூலம் விளம்பரம் தேடும் நோக்குடன் இவ்வாறு செய்யப்பட்டிருந்தால் அதை விட பெரிய இழிவு இல்லை.
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது, அவரது வேண்டுகோளை ஏற்று நடிகர் விஜய் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் இந்தி திரைப்பட நடிகர்கள் புகைக்கும் காட்சிகளில் நடிப்பதை கைவிட்டனர்.தொடக்கத்தில் இத்தகைய அறிவுரைகளை மதிக்காத நடிகர் ரஜினிகாந்த், பின்னர் 2012 ஆம் ஆண்டு அவரது பிறந்த நாள் விழாவில் பேசும் போது, ராமதாஸ் சொன்ன கருத்து ரொம்ப நல்ல கருத்து. அதற்கு பிறகு நான் நடிக்கின்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சியை வைக்கவில்லை. ரசிகர்கள் புகைப் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திரைத்துறையினருக்கும் சமூகப் பொறுப்பு தேவை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களை நள்ளிரவில் சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவி வழங்கிய விஜய்யின் செயல் பாராட்டத்தக்கது.அது தான் சமூகப் பொறுப்பு.அதேபோல், புற்றுநோய் மருத்துவமனைக்கு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் சன் பிக்சர்சின் செயலும் சமூக அக்கறை தான். இந்த சமூக அக்கறைகள் உண்மையானவையாக இருந்தால் சர்கார் படத்தின் புகைக் காட்சியை நடிகர் விஜய்யும், சன் பிக்சர்சும் உடனே நீக்க வேண்டும்'' என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- காதல், திருமணம் எதுவென்றாலும் 'இவரோடு' மட்டும்தான்.. தெறிக்கவிட்ட சிம்பு!
- 'தங்கத்தமிழ்' ரசிகர்களால் 'தளபதி' விஜய்க்கு கிடைத்த பெருமை
- பிஹைண்ட்வுட்ஸ்விருதுகள்2018: 'ஆளப்போறான் தமிழன்' சிறந்த நடன இயக்குநர் விருதை வென்ற ஷோபி
- பிஹைண்ட்வுட்ஸ் விருதுகள் 2018: விஜய் சாருக்காக 'ஆளப்போறான் தமிழன்' எழுதியதில் பெருமை!
- 'தளபதி' விஜய்யை சந்தித்த பிரபல இயக்குனர்.. காரணம் என்ன?
- 'தளபதி 62' பாடல் குறித்து பகிர்ந்த நடன இயக்குநர்!
- 'கஷ்டத்தில் பங்குகொண்ட மகன்'... துப்பாக்கிச் சூட்டில் பலியானவரின் தாய் உருக்கம்!
- துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு... நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!
- 'தளபதி 62' படக்குழுவுடன் கைகோர்த்த 'பிரமாண்ட' நிறுவனம்!
- 'யார் மீதும் காதலில் விழுந்து விடாதே'.. பிரபல நடிகைக்கு 'அட்வைஸ்' செய்த தளபதி!