தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அடுத்த 10 நாட்களுக்கு யாரும் சுற்றுலா செல்ல வேண்டாம் என, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:-
மும்பை முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு கடற்கரையின் உச்சி முதல் அடிமட்டம் வரையிலான பகுதிகளிலும், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களிலும் இன்று முதல் தென் மேற்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்தப் பகுதிகளில் அடுத்த 10 நாட்களுக்கு கன மழைமுதல் மிக கனமழையை எதிர்பார்க்கலாம்.குறிப்பாக கோவை மாவட்டம்(வால்பாறை), நீலகிரி மாவட்டம், தேனி(பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகள்),கன்னியாகுமரி(பேச்சிப்பாறை மண்டலம்), நெல்லை(மாஞ்சோலை முதல் பாபநாசம் வரை) ஆகிய பகுதிகளில் இன்று முதல் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும்.
மும்பையில் இன்று முதல் மழை தொடங்கி இருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் மும்பையில் மழை தீவிரமடையும். நகர்புறங்களில் சில நேரங்களில் தொடர்ந்து இடைவிடாது பெய்யலாம், வானத்தை கிழித்துக்கொண்டு மழை பெய்தது போன்று பெய்யலாம்.
மும்பைக்கும் ரத்னகிரி,மங்களூரு, கோழிக்கோடு பகுதிகளில் மிக கனமழை இருக்கும். அடுத்து வரும் நாட்களில் மங்களூரு நகரில் அதிகமான மிக கனமழை இருக்கும். கோவாவில் மழை மிகக் கடுமையாக இருக்கும் என்பதால், சுற்றுலா செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான கர்நாடகாவின் குடகு மலைப்பகுதி, வயநாடு(கபினி), மூணாறு, வால்பாறை, கோவா, மகாபலேஸ்வர், கர்நாடகா கடற்கரைப்பகுதி, மலைப்பகுதிகள் ஆகியவற்றுக்கு சுற்றுலா செல்லதிட்டமிட்டு இருந்தால், அதை சற்று தள்ளிப்போட்டுக் கொள்ளவும். மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 10 நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக 1500 மிமீ மழைகூட பெய்யலாம். கவனமாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
மஹாராஷ்டிரா முதல் கேரளா வரையிலான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், மலைப்பகுதிகளில் பயணிப்பதை தவிர்க்கவும். தமிழகத்திலும் ஒருசில மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா திட்டமிட்டு இருந்தால், 10 நாட்களுக்கு தள்ளிப்போடவும்.
RELATED NEWS SHOTS
OTHER NEWS SHOTS
RELATED NEWS SHOTS
- Mumbai: Young inter-faith couple found dead in car
- HD Kumaraswamy expands cabinet, 25 ministers inducted
- Good news: Heavy rains expected in Tamil Nadu from tomorrow
- தடைகளைத் தாண்டி 'கர்நாடகாவில்' வெளியாகிறது காலா
- Rajinikanth appeals to Karnataka in Kannada to provide security at theatres
- காலா விவகாரம்: கன்னடத்தில் கோரிக்கை வைத்த ரஜினி!
- காலா திரைப்படம் வெளியாகும் 'தியேட்டர்களுக்கு' பாதுகாப்பு அளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
- Karnataka withdraws flood alert for Bengaluru
- Picnic turns deadly after 7-year-old drowns in pool
- Get ready Chennai people: June will bring rainfall