இன்று (சனிக்கிழமை) முதல் பாலிதீன் பைகளுக்கு மகாராஷ்டிராவில்  தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பாலிதீன் பைகளைப் பயன்படுத்துவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தடையுத்தரவு இன்றுமுதல் அமலுக்கு வந்தாலும் இன்றும், நாளையும் பாலிதீன் குறித்து மக்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என்றும் திங்கட்கிழமை முதல் அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

 

பாலிதீன் பைகளை உபயோகித்து முதல் தடவை பிடிபடுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம், இரண்டாவது தடவை பிடிபடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது தடவை பிடிபட்டால் ரூ.25 ஆயிரம் அபராதத்துடன், 3 மாத ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

BY MANJULA | JUN 23, 2018 5:58 PM #MUMBAI #PLASTIC #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS