விமானத்தை இயக்குவதற்கு முன் காலில் விழுந்த விமானி.. வைரல் வீடியோ!
Home > தமிழ் newsசென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ விமானத்தில் நடந்தது இந்த மனதை உருக்கும் நிகழ் காட்சி. இண்டிகோவில் விமானியாக உள்ள சென்னையை சேர்ந்த பிரதீப் கிருஷ்ணன் தன் பாட்டியையும், தாயாரையும் பாதம் தொட்டு வணங்கி சகோதரிக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு தான் இயக்கவேண்டிய விமானத்தை இயக்கியுள்ளார்.
ஏறத்தாழ 11 ஆண்டுகள் விமானியாக பணிபுரியும் பிரதீப் கிருஷ்ணன் முதல் முறையாக விமானத்தில் சென்னை முதல் சிங்கப்பூர் வரை பயணிக்கும் தனது தாய், பாட்டி உள்ளிட்டோரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு விமானத்தை இயக்கத் தொடங்கியுள்ளார். தூய உள்ளம் கொண்ட அவரது நெகிழ்ச்சியும் தாயுள்ளம் கொண்ட அவர்களது மகிழ்ச்சியும் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
FLIGHT, INDIGO, HEARTWARMING, VIDEO, VIRAL, CHENNAI, TAMILNADU, PRADEEPKRISHNAN