'விமானத்தில் தனது ஆசிரியரை கட்டியணைத்து கௌரவித்த விமானி'...நெகிழ்ச்சியான வீடியோ!

Home > தமிழ் news
By |
'விமானத்தில் தனது ஆசிரியரை கட்டியணைத்து கௌரவித்த விமானி'...நெகிழ்ச்சியான வீடியோ!

தான் ஓட்டும் விமானத்தில் பயணித்த தனது ஆசிரியரை,விமானி ஒருவர் கட்டியணைத்து நெகிழ்ந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

ஆசிரியர் எனபவர் ஒவ்வொருவரின் வாழ்விலும்  இன்றியமையாத இடத்தை பெற்றவர்.அவர்கள் தங்களிடம் பயின்ற மாணவர்கள் எப்போதுமே,தன்னை விட உயரமான இடத்திற்கு வாழ்க்கையில் செல்ல வேன்டும் என்ற ஆசை கொண்டவர்கள்.நம்முடைய வளர்ச்சியை கண்டு யார் வேண்டுமானாலும் பொறாமை படலாம்.அனால் ஆசிரியர் என்பவர் மட்டுமே,அதனை நினைத்து தினம் தினம் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்.

 

அதே போல் மாணவர்களும் தான் எந்த உச்சத்தை தொட்டாலும்,தங்களின் ஆசிரியரை எப்போதுமே மறவாமல் நினைவில் வைத்திருப்பார்கள்.அதே போன்ற ஒரு சம்பவம் தான் துருக்கி நாட்டில் நடந்துள்ளது.அந்த நாட்டில் ஆசிரியர் ஒருவர் விமானத்தில் பயணம் செய்வதற்காக எறியுள்ளார்.அப்போது திடீரென விமானியிடம் இருந்து ஒரு அழைப்பு வருகிறது.அதில் ''ஆசிரியர் குறித்தும் அவரது பணி குறித்தும் அந்த விமான உருக்கமாக விவரிக்கிறார்.அதோடு அந்த விமானி, தான் அந்த ஆசிரியரின் மாணவன் எனவும், தனக்கு பிடித்தமான ஆசிரியர் இவர் தான் எனவும் எல்லோருக்கும் கேட்கும் படி மைக்கிலேயே அறிவித்தார்.

 

இதனை சற்றும் எதிர்பாராத அந்த ஆசிரியரின் கண்கள் மகிழ்ச்சியால் நிரம்பியது.அதன் பின் விமான ஊழியர்கள் வரிசையாக வந்து ஆசிரியருக்கு பூங்கொத்து ஒன்றை அன்பளிப்பாக அளித்து,அந்நாட்டு கலாச்சாரப்படி அவரது கையில் முத்தமிட்டு அவருக்கு மரியாதை செய்தனர். அதன் பின் வந்த விமானி அந்த ஆசிரியருக்கு மரியாதை செய்து கட்டியணைத்து,தான் இந்த நிலையில் இருப்பதற்கு இவர் ஒரு முக்கிய காரணம் என கூறி அவருக்கு நன்றி கூறினார்.

 

இருவரின் கண்களும் கண்ணீரால் நிரம்பியது.அதோடு இந்த சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த மற்ற பயணிகளையும் கண் கலங்க செய்தது.அந்த விமானமே சிறிது நேரம்,உணர்வு பூர்வமாக காணப்பட்டது.இந்நிலையில் இச்சம்பவத்தை அந்நாட்டின் பிரபல பத்திரிக்கையாளர் இஷ்துஸாம் உல் ஹக் என்ற பத்திரிக்கையாளர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

 

மேலும் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வருவதோடு,இந்த சம்பவம் தங்களின் ஆசிரியர்களையும் நினைவு கூற செய்வதாக நெகிழ்ச்சியோடு பதிவிட்டு வருகிறார்கள்.

FLIGHT, PILOT, TEACHER