மாப்பிள்ளை தோழன் செய்ற வேலையா இது ? திருமண வீட்டில் சிறுவனின் வேடிக்கையான செயல்!
Home > தமிழ் newsபிலிப்பைன்ஸ் நாட்டில் திருமண வீட்டில் மாப்பிள்ளை தோழனாக இருந்த சிறுவன்,மணப்பெண்ணிற்கு தோழியாக மலர் கூடையுடன் நிற்கும் சிறுமியை முத்தமிட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தேவாலயத்தில் திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதியரை விதவிதமாக போட்டோவிற்கு போஸ் கொடுக்குமாறு போட்டோ எடுக்கும் நபர் சொல்லிக்கொண்டிருந்தார்.அதற்கு ஏற்றாற்போல் தம்பதியரும் போஸ் கொடுத்து கொண்டிருந்தார்கள். திருமணம் முடிந்த பிறகு புதுமணத் தம்பதியர்கள் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்து போட்டோ எடுப்பது வழக்கம்.
அப்போது மணப்பெண்ணின் உடன் இருக்கும் தோழிகள் மற்றும் மணமகனின் தோழர்கள் என அனைவரும் அவர்களின் கண்களை மூடிக்கொள்வார்கள்.இது ஒரு வழக்கமாக இருந்து வருகிறது.அவ்வாறு முத்தமிட்டு போட்டோ எடுக்கும் போது மாப்பிளை தோழனாக இருந்த அந்த சிறுவன் மலர் கூடையை ஏந்தி நின்ற அந்த சிறுமிக்கு யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் முத்தம் கொடுத்தான். சிறுவனின் வேடிக்கையான செயல் அங்கிருந்தவர்களுக்கு கடும் சிரிப்பை வரவழைத்தது. அதன் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.