அமைச்சரை கீழே தள்ளி அறைந்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி.. வைரல் வீடியோ!

Home > தமிழ் news
By |
அமைச்சரை கீழே தள்ளி அறைந்த வாலிபருக்கு பொதுமக்கள் தர்ம அடி.. வைரல் வீடியோ!

மத்திய அமைச்சரை மகாராஷ்டிராவில் வாலிபர் ஒருவர் மத்திய அமைச்சரை தள்ளிவிட்டு அறைந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  இந்திய குடியரசு கட்சி மற்றும் மத்திய சமூக நலத்துறை அமைச்சர் ராம்தாஸ் அதவாலே மகாராஷ்டிர மாநிலம் தானே என்கிற இடத்தில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்றபோது, அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதுபோல் வந்த வாலிபர் ஒருவர் அமைச்சரை கீழே தள்ளி அறைந்துள்ள சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதனால் ஆத்திரம் அடைந்த குடியரசு கட்சியினர் அமைச்சரை தள்ளிவிட்டு அறைந்த வாலிபரான பிரவீன் கொசாவி என்பவருக்கு தர்ம அடி கொடுத்து போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸாரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரவீன் கொசாயிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் தன் கட்சித் தலைவரையே இவ்வாறு அடித்ததால் அதே கட்சியின் இளைஞரணியில் உறுப்பினராக இருக்கும் பிரவீன் கொசாய் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


இதனிடையே தனக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து ராம்தாஸ் அதவாலே  தான் ஒரு பிரபலமான அரசியல் தலைவர் என்பதாலும், தனக்கு காவலர்களால் சரியான முறையில் பாதுகாப்பு அளிக்க முடியாததாலும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தனக்கு அரசியலில் உருவாகி  வரும் வளர்ச்சியை விரும்பாதவர்கள் யாரோதான் இதுபோன்ற இளைஞர்களை அனுப்புகிறார்கள் என்றும் கூறினார்.  மேலும் இது தொடர்பாக மகாராஷ்டிர முதல்வரை சந்தித்து முறையிடப் போவதாகவும் கூறியுள்ளார்.


இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ட்வீட் பதிவிட்டுள்ள தேசிய தலித் போராளியும் குஜராத் சட்ட நிபுணருமான ஜிக்னேஷ் மேவானி “டெல்டா, ரோஹித் வெமுலா, ஐநா ஆணையம், பீமா கொரிகன், பாரத் பந்த் உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சரின் நடவடிக்கைகள் விரும்பத்தக்கதாக இல்லாத காரணத்தாலேயே இத்தகைய கோபம் இந்த இளைஞனுக்கு இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது எனினும் ப்ரவீன் கொசாவி இந்த முறையில் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது” என்று கூறினார்.

 

MAHARASHTRA, VIRAL, VIDEO, BIZARRE, MP