ஆபத்தின் விளிம்பில் நின்று செல்ஃபி பாலமாகிய சிக்னேச்சர் பாலம்!

Home > தமிழ் news
By |
ஆபத்தின் விளிம்பில் நின்று செல்ஃபி பாலமாகிய சிக்னேச்சர் பாலம்!

செல்ஃபி வந்தபிறகே பலருக்கும் செல்போன் மீதான மோகம் துளிர்விட்டுள்ளது என்று சொல்லலாம். டெல்லியில் 14 வருடங்களுக்கு பிறகு கட்டி முடிக்கப்பட்டு, தற்போதே கட்டி முடிக்கப்பட்டுள்ள சிக்னேச்சர் என்கிற பாலத்தில் பொதுமக்கள் பலரும் ஆபத்தான வகையில் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

அதிகம் கூட்டத்தாலும் போக்குவரத்து நெரிசலாலும் சூழந்துள்ள இந்த பாலத்தின் அருகில் புகைப்படம் எடுத்துக்கொள்வதும், செல்ஃபி எடுத்துக்கொள்வதுமாக இருக்க, சிலர் பாலத்தின் விளிம்பில் உள்ள ஆபத்தான கேபிள்களில் அபாயகரமான முறைகளில் தொங்கிக்கொண்டும், ஓடும் காரில் இருந்து வெளியில் இறங்கியபடியும் செல்ஃபிக்களை எடுத்துள்ளதால் இந்த பாலம் சுற்றுத் தளமாக மாறியுள்ளது எனலாம்.

 

யமுனை ஆற்றில் பள்ளிவாகனம் விழுந்து 22 குழந்தைகள் இறந்த பிறகு இப்பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளியன்று சிக்னேச்சர் பாலத்தின் அருகே இருந்து புகைப்படம் எடுக்க அங்கு வந்த மக்கள் விரும்பியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகமானது. செல்ஃபி எடுக்க அங்கு வந்தவர்கள் பாலத்தில் இருந்த கேபிள்களின் மேல் தொங்கியும், நகரும் கார்களில் இருந்து இறங்கியும் புகைப்படம் எடுக்க தொடங்கினர்.

 

சிக்னேச்சர் பாலத்தில் 154 மீட்டர் உயரத்தில் அமைந்துள கண்ணாடி பெட்டகத்தை பார்க்கும்போது ஒரு பருந்துப்பார்வை வாய்க்கும் என்பதால் பலரும் இதை காண விரும்புகின்றனர்.  முன்னதாக 1997-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 1,131 கோடிக்கு மதிப்பிடபட்ட இந்த பாலம் 2010 காமன்வெல்த் வீளையாட்டுகளின் போது முடிக்க திட்டமிடபட்டு இறுதியில் 2017 டிசம்பரில் கட்டிட பணி முடிவடைந்தது.

BRIDGE, SELFIE, VIRAL, RISK, DELHI, ADICTION, BIZARRE