'தீவிரவாதிகளை சும்மா விட கூடாது'...கொந்தளிப்பில் நாட்டு மக்கள்...வலுப்பெறும் கோரிக்கை!
Home > News Shots > தமிழ் newsகாஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் தங்களின் இன்னுயிரை நாட்டிற்காக இழந்துள்ளார்கள்.இது நாட்டுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை அடியோடு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
விடுப்பிற்கு சொந்த ஊர் சென்று விட்டு பணிக்கு திரும்பி கொண்டிருந்த மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் மீது,தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தினார்கள்.இந்த கோழைத்தனமாக தாக்குதலில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தார்கள்.350 கிலோ வெடிபொருட்களை கொண்டு இந்த தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் கடும் கண்டன குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.இந்திய ராணுவம் தங்களின் பலம் என்ன என்பதனை கட்ட வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.இதனிடையே தாக்குதலுக்கு தலைமை தாங்கிய அடில் அகமது மீது கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதக் கூட்டத்தை விட வேண்டாம்,அவர்களை கூண்டோடு அளிக்க வேண்டும் என,கண்டன குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.
மேலும் தாக்குதலில் உயிர் தியாகம் அடைந்த வீரர்களுக்கு நாட்டு மக்கள் தங்களின் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.