‘ஃபிளைட்டிலயா புகை பிடிக்கணும்’.. பயணிக்கு நேர்ந்த சோதனை!
Home > தமிழ் newsகோவாவில் விமானம் ஒன்றின் கழிவறையில் புகைப்பிடித்தற்காக பயணி ஒருவரின் மீது இண்டிகோ நிறுவன அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர்.
நேற்று அகமதாபாத்திலிருந்து கோவாவுக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், பயணி ஒருவர் கழிவறையில் புகை பிடித்துள்ளார். இதனால் விமானத்தில் தீடீரென புகை நாற்றம் வீசியதை அடுத்து விமான அதிகாரிகள் கழிவறையில் இருந்து புகை வருவதை நோட்டமிட்டு, கதவை தட்டியுள்ளனர். உடனே வெளியே வந்த அந்த பயணிடம் ஏன் புகைப்பிடித்தீர்கள்? என்றும் கேட்டுள்ளனர். ஆனால் அந்த பயணி அலட்சியப்படுத்தியதால் உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அவர் அந்த பயணியிடம் விமானத்தில் புகை பிடிப்பது சட்டப்படி குற்றம் என்று பேசி கண்டித்துள்ளார். பின்னர் கோவாவில் அந்த விமானம் தரையிறங்கியதும் காவல் நிலையத்தில் அந்த பயணியின் மீது புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதே போன்று சமீபத்தில் டெல்லியிலிருந்து புறப்பட்ட விஸ்தரா விமானத்தில், பயணி ஒருவர் விமான அதிகாரிகளிடம் புகைப்பிடிக்க அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அந்த பயணி அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் விமானம் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதாக புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.