'ஏர் இந்தியா உணவில் மிதந்த கரப்பான் பூச்சி'.. புகார் அளித்த பயணியின் நிலை!

Home > தமிழ் news
By |

ஏர் இந்தியா விமான உணவில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகளின் அவதிப்பட்ட செய்தி பரபரப்பாக பரவிவருகிறது.

'ஏர் இந்தியா உணவில் மிதந்த கரப்பான் பூச்சி'.. புகார் அளித்த பயணியின் நிலை!

போபாலில் இருந்து கடந்த சனிக்கிழமை மும்பைக்குச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் ரோஹித் ராஜ் சிங் சவுகான் என்பவருக்கு இட்லி, வடை, சாம்பார் எல்லாம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவரோ வெஜிட்டேரியன் உணவுதான் அது என நினைத்து  சாப்பிட போகும்போதுதான் அதில் இருந்த கரப்பான் பூச்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் இதுகுறித்து அவரளித்த புகாருக்கும் அங்கிருந்த ஊழியர்கள் நடவடிக்கை எடுக்காததால், விமானத்தை விட்டு இறங்கிய பின் தலைமை அதிகாரிக்கு தனது புகாரை கடிதமாக எழுதி தந்துள்ளார்.

ஆனாலும் ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டியதை அடுத்து அவர் யோசித்தது ஒன்றே ஒன்றுதான். இருக்கவே இருக்கு ஆபத்பாந்தவன் சமூக வலைதளங்கள். மக்களுக்கு முன் புகாரை வைத்தால் யாரும் தப்பிக்க முடியாது என்று முடிவு செய்துள்ளார். அதற்கென தனது செல்போனில் அந்த கரப்பான் பூச்சி விழுந்த விமான உணவை ஏற்கனவே நல்லவேளையாக புகைப்படம் எடுத்து வைத்திருந்திருந்ததால், அவற்றை ட்விட்டரில் பதிவு செய்து ஏர் இந்தியாவின் விமான டிக்கெட்டையும் பதிவிட்டு ஏர் இந்தியாவுக்கு டேக் செய்து கோர்த்துவிட்டார்.

மேலும் ஏர் இந்தியாவின் சேவை மீதான தன் வருத்தத்தையும் பதிவு செய்திருந்தார். இதற்குப் பிறகு பேசிய ஏர் இந்தியாவின் மேனேஜர் ராஜேந்திர மல்ஹோத்ரா, ரோகித் ராஜ்சிங் சவுகான் அனுப்பிய புகார் கடிதம் தனக்கு வரவில்லை என்றும் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியதோடு, மன்னிப்பையும் கேட்டுள்ளார்.

BIZARRE, FOOD, HEALTH, AIRINDIA, FLIGHT, SHOCKING