சென்னை அயனாவரத்தை சேர்ந்த காது கேளாத 11 வயது சிறுமியை சுமார் 17 பேர் 7 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் குடியிருப்பை சேர்ந்த 17 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட 17 பேரையும் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட  17 பேரையும் வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பைத் தொடர்ந்து `17 பேரும் புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

 

இந்தநிலையில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும், என நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஆதங்கத்துடன் எழுதிய கவிதையினை கீழே பார்க்கலாம்.

 

அறுத்தெறியுங்கள்!!!

 

இந்த நிமிடம்
இதே மணிக்கு
இங்கோ அங்கோ எங்கோ
ஒரு பாலியல் வன்கொடுமை
நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது ...
அதுவும் தொலைக்காட்சியில் இன்றைய
நிகழ்வை பார்த்தபடி!!!
அதை தடுப்பது எப்படி?
ஏனெனில்,
போன வாரம்
போன மாதம்
போன வருடம்
வேறு ஒரு சிறுமியின் உறைந்த ரத்தத்தின் மீது ஈனஸ்வரத்தில் நம் துயர், ஈக்களாய் மொய்த்துக் கொண்டிருக்கையில்
இந்த 17-ம், இன்னும் சில மிருகங்களும்
செவி திறனற்ற ஒரு சங்கு புஷ்பத்தினை
பிய்த்தெறிந்து கொண்டிருந்தனர்.
எனவே
நம் கண்களையும் காதுகளையும்
கூர்மையாக்கி, ___- க்கு அலையும்
மனுஷ ப்ராணிகளை கண்டறிந்து
காயடிக்க வேண்டும்!

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS