'250 கோடி'யில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் ''பாம்பன் பாலம்''...மாதிரி வீடியோ வெளியீடு!

Home > தமிழ் news
By |
'250 கோடி'யில் புதிதாக அமைக்கப்பட இருக்கும் ''பாம்பன் பாலம்''...மாதிரி வீடியோ வெளியீடு!

ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பலமானது இந்தியாவில் உள்ள மிக பழமையான பலமாகும்.ராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைக்கும் வகையில் மன்னார் வளைகுடா மற்றும் பாக். நீரிணைப்பு கடல் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலமானது,2.3 கி.மீ. தூரம் கொண்டது.

 

இந்நிலையில் பாம்பன் பாலத்தில் கடந்த 4ம் தேதி விரிசல் ஏற்பட்டது.தூக்குப் பாலத்தின் இணைப்புக் கம்பிகளில் சுமார் 20 அடி நீளத்திற்கு விரிசல் ஏற்பட்டது.இதனையடுத்து பாலத்தின் உறுதித் தன்மையை நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் ஆய்வு செய்த பின்னரே ரயில்கள் இயக்க முடியும் என அறிவிக்கப்பட்டது.இதனால் கடந்த 21 நாட்களாக ராமேசுவரத்துக்கு ரயில்கள் இயக்கப்படவில்லை.

 

இந்நிலையில், பாம்பன் பாலத்திற்கு அருகிலேயே 250 கோடி ரூபாய் செலவில் புதிய ரயில் பாலம் அமைக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.''பழைய பாலம் கட்டப்பட்டு 104 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், தூக்கு பாலத்தில் விரிசல் விழுந்திருப்பதாலும் பாம்பன் பாலத்துக்குப் பதிலாக சுமார் ரூ.250 கோடி செலவில் புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

மின்மோட்டார் மூலம் தானியங்கி முறையில் தூக்கு பாலம் செயல்படும். இந்தியாவிலேயே இத்தகைய தொழில்நுட்பத்தில் தூக்கு பாலம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை'' என ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

INDIANRAILWAYS, RAILWAY, PAMBAN BRIDGE, VERTICAL-LIFT BRIDGE, RAMESWARAM