கடந்த 24-ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து 11 வயது சிறுவன் ஒருவன் வழிதவறி, தேக்வார் மாவட்டம்(காஷ்மீர்) பூன்ச் பகுதிக்குள் நுழைந்து விட்டான்.

 

அவனைப்பிடித்த பாதுகாப்பு படையினர் காஷ்மீர் போலீசாரிடம் ஒப்படைக்க, விசாரணையில் அந்த சிறுவன் பெயர் முஹம்மது அப்துல்லா(11) என்பது தெரியவந்தது. மனிதநேய அடிப்படையில் 3 நாட்கள் அந்த சிறுவனை போலீசார் கைது செய்யாமல் வைத்திருந்த நிலையில், இந்திய இராணுவத்தினர் அச்சிறுவனை பாகிஸ்தான் அதிகாரிகளிடம் நேற்று ஒப்படைத்தனர்.

 

அந்தச்சிறுவனை ஒப்படைக்கும் போது, புதிய ஆடைகள், இனிப்புகள், விளையாட்டுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து,மகிழ்ச்சியுடன் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தினர் அனுப்பிவைத்துள்ளனர்.

 

இதுகுறித்து இந்திய இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், "சிறுவனின் உடைகள் அழுக்காக இருந்ததால், அவனுக்கு புதிய உடைகள் எடுத்துக்கொடுத்தோம். மேலும் இனிப்புகள், சாக்லேட்டுகள், விளையாட்டுப்பொருட்கள் வாங்கிக் கொடுத்து பாகிஸ்தான் ராணுவத்திடம் சிறுவனை அனுப்பிவைத்தோம். இந்திய ராணுவத்தின் இந்த மனிதநேய நடவடிக்கை எதிர்காலத்தில் இரு நாட்டுராணுவத்துக்குள் அமைதியை உருவாக்கும். இந்திய ராணுவம் ஒருபோதும் அப்பாவி பொதுமக்கள் மீது எந்தவிதமான தாக்குதலையும் மேற்கொள்ளாது,'' என தெரிவித்துள்ளார்.
 

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS