‘ரன் அவுட் கொடுத்த அம்பயர்.. விளையாட வைத்த எதிரணி கேப்டன்’..வைரல் நிகழ்வு!
Home > தமிழ் newsஆஸ்திரேலியாவில் உள்ளுர் பிக்பாஷ் லீக் போட்டியின் 2018-19-ஆம் ஆண்டுக்கான தொடர் நடந்தது. அடிலெய்டு மற்றும் பிரிஸ்பென் அணிகள் மோதிய இந்த தொடரில் ரன் அவுட் ஆன விளையாட்டு வீரரை, எதிரணி கேப்டன், ‘அவுட் இல்லை’ என்று சொல்லி விளையாட வைத்திருக்கும் நிகழ்வு பரவலாகி வருகிறது.
பிரிஸ்பென் அணியைச் சேர்ந்த பேட்டின்சன், அடிலெய்டு வேகப்பந்து வீச்சாளரான பென் லாக்லினின் அசாத்தியமான பந்துவீச்சின்போது ரன் அவுட் ஆகியுள்ளார். எனினும் நொடியில் முடிந்த இந்த ரன் அவுட்டை மறு பரிசீலனை செய்யும் விதமாக மீண்டும் மூன்றாவது அம்பயரின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பொது மைதானத்தின் எல்இடி ஸ்கிரீனில், இந்த ரன் அவுட் எப்படி நடந்ததென மெதுவாக மீண்டும் ஓட்டி பார்த்ததில், பந்து ஸ்டெம்பில் படும்போது வீரர் பேட்டின்சன் கிரீஸ்க்குள் வந்துவிட்டார் என்பது குழப்பமில்லாமல் நன்றாகவே தெரிந்தது. ஆக, இப்போது அவுட் இல்லை என்று ஸ்கிரீனில் வரவேண்டும். ஆனால் அதற்கு நேர்மாறாய் ‘அவுட்’ என ஸ்கிரீனில் வந்தது. இதனால் முகச் சுளிப்புட்டன் பேட்டின்சன் வெளியேறினார். ஆனால் எல்லாருக்கும் தெரிந்த உண்மை அவர் அவுட் ஆகவில்லை என்பதுதான். இதனை யோசித்த எதிரணியான அடிலெய்டு அணியின் கேப்டன், காலின் இங்ரம் பேட்டின்சனை அழைத்து விளையாட வைத்துள்ளார்.
உண்மையில் எல்லாராலும் எளிதாக ‘அவுட் இல்லை’ என்று புரிந்துகொள்ளக்கூடிய இந்த ரன் அவுட் விவகாரத்தில் ‘அவுட்’ என்று ஸ்கிரீனில் வந்தது தவறுதலாக அவுட் இல்லை என்று போடுவதற்கு பதில் அவுட் என்று போடப்பட்டு நிகழ்ந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
எனினும் மூன்றாவது அம்பயரின் முடிவாக ஸ்கிரீனில் அவுட் என்று வந்த பின், அந்த பேட்ஸ்மேனை, எதிரணியின் கேப்டன் ஒருவர் நேர்மையாக விளையாடவைத்துள்ள இந்த சம்பவம், பலரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.