'கருணாநிதி மிகவும் கவலைக்கிடம்'.. காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிக்கை!
Home > தமிழ் news
கடந்த 27-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், 24 மணி நேரம் கழித்தே எதையும் சொல்ல முடியும் என்றும் காவேரி மருத்துவமனை நேற்று மாலை அறிக்கை வெளியிட்டது.இதைத்தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
இந்தநிலையில் கருணாநிதி உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என, காவேரி மருத்துவமனை சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், " திமுக தலைவர் கருணாநிதி மிகவும் கவலைக்கிடமாக உள்ளார். கடந்த சிலமணி நேரமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. முடிந்தவரை சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமாக உள்ளது.
தீவிர சிகிச்சை அளித்தபோதிலும் கருணாநிதியின் முக்கிய உடல் உறுப்புகள் மோசமடைந்து வருகின்றன,'' இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.