'இதனை விரும்பவில்லை'.. சாம்பியன் பட்டம் வாங்கிய பிறகு சாய்னா வருத்தம்..வைரல் ட்வீட்!

Home > தமிழ் news
By |

இந்தோனேஷியாவின் ஜகர்தாவில் இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்தது.

'இதனை விரும்பவில்லை'.. சாம்பியன் பட்டம் வாங்கிய பிறகு சாய்னா வருத்தம்..வைரல் ட்வீட்!

இதில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மகளிர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயினைச் சேர்ந்த உலக சாம்பியன், கரோலினா மரினை எதிர்கொண்டார். உலக சாம்பியன் மட்டுமல்லாது ஒலிம்பிக் சாம்பியனுமான கரோலினா மரினின் சிறப்பான ஆட்டம் தொடக்கம் முதலே இருந்தது.

ஆனால் ஒரு கட்டத்தில் ஒரு நேர்த்தியான ஷாட்டை அடிக்க முயன்ற கரோலினா மரின் திடீரென எகிறி அடித்துவிட்டு குதித்ததால் அவரது வலது காலை பிடித்துக்கொண்டு கீழே அமர்ந்துகொண்டார். அதன் பின்னரே தனது கால் முட்டியில் அதிகப்படியான வலி இருந்ததை உணர்ந்து கண்ணீர் விட்டே அழுதுவிட்டார்.

எனினும் ஒரு சிறிய, உடனடி பிசியோதெராபி சிகிச்சைக்கு பின் ஆடிய கரோலினா மரின், அடுத்த சில நிமிடங்களிலேயே தன்னால் தொடர்ந்து கால்வலியுடன் ஆடவியலாது என்று கூறிவிட்டார். அதுவரை 10-4 என்கிற கணக்கில் முன்னிலை வகித்திருந்த கரோலினா போட்டியில் இருந்து பாதி ஆட்டத்தில் வெளியேறியதால் சாய்னா நேவால் வெற்றி பெற்றார் என்று தெரிவிக்கப்பட்டது.

சாய்னா நேவால் தனது 28வது வயதில் வென்ற 24 வது சர்வதேச கவுரமாக இந்த வெற்றி அறியப்பட்டதை அடுத்து அவருக்கு ரூ.18 1/2 லட்சம் தொகை பரிசாகக் கிடைத்தது. ஆனால் இந்த போட்டி பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாய்னா நேவால், ‘இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 என்கிற இந்த போட்டிகளின் இறுதி ஆட்டம் இப்படி முடிந்திருப்பதை நான் சிறிதும் விரும்பவில்லை; விளையாட்டு வீரர்களுக்கு உண்டாகும் காயங்கள் கொடுமையானவை; பெண்களுக்கான பேட்மிண்டனின் சிறந்ததொரு வீராங்கனையான கரோலினா மரினோடு இன்று விளையாடியிருக்கிறேன், ஆனால் அவருக்கு இவ்வாறு நடந்திருப்பது துரதிர்ஷ்டமானது; அவர் விரைவில் பூரண நலம் பெற்று மீண்டு வர விரும்புகிறேன்’என்று கூறியுள்ளார்.

CAROLINAMARIN, INDONESIAMASTERSSUPER500, SAINA NEHWAL ‏, VIRAL