சச்சினோடு,கோலியை ஒப்பிடுவதா?.. கொந்தளித்த கிரிக்கெட் பிரபலம்!

Home > தமிழ் news
By |
சச்சினோடு,கோலியை ஒப்பிடுவதா?.. கொந்தளித்த கிரிக்கெட் பிரபலம்!

சச்சினோடு,கோலியை ஒப்பிடுவது அபத்தமானது என முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார்.

 

சச்சினின் எண்ணற்ற சாதனைகளை விராட் கோலியால் தான் முறியடிக்க முடியும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதேபோல் அவரும் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு புதிய சாதனையை படைத்து வருகிறார்.

 

இந்தநிலையில் சச்சின் டெண்டுல்கரோடு, விராட் கோலியை ஒப்பிடுவது அபத்தமானது என ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து கடந்த சனிக்கிழமை தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ''சச்சினோடு, கோலியை ஒப்பிட்டதே முதலில் மிகவும் அபத்தமானது. சச்சினோடு ஒப்பிட்டுப் பேசுவதற்கே கோலி நீண்ட காலம் கிரிக்கெட்டில் இன்னும் பயணிக்க வேண்டும். இருவீரர்களை ஒப்பிட்டுப் பேசுவது தவறானது. 

 

அதேபோல சச்சினின் சாதனைக்கு அருகே வந்து அந்தச் சாதனையை முறியடிக்கும் தகுதிவாய்ந்த வீரர் யாராக இருக்க முடியும் என்று கேட்டால், அது கோலியாகத்தான் இருக்க முடியும். ஏனென்றால், கிரிக்கெட் போட்டிகளில் ரன் சேர்க்க வேண்டும் என்கிற வெறி, அதற்குரிய திறமை கோலிக்கு அதிகமாக இருக்கிறது,'' என தெரிவித்துள்ளார்.

VIRATKOHLI, SACHINTENDULKAR