Viral Photo: 'பர்த்டே பார்ட்டிக்கு யாருமே வரல'.. பீட்ஸாக்களுடன் தன்னந்தனியாக காத்திருந்த குட்டி பையன்!
Home > தமிழ் newsதனது 6 வயது பர்த்டே பார்ட்டிக்கு யாருமே வராததால், ஏமாற்றத்தில் தனியாக அமர்ந்திருந்த சிறுவனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த டஸ்கன் நகரில், தனது அம்மாவுடன் 6 வயது குட்டிப்பையன் டெடி வசித்து வருகிறான். கடந்த 3-ம் தேதி டெடிக்கு 6-வது பிறந்தநாள் வந்தது.ஆனால் அலாஸ்கா நகரில் வசித்து வரும் அவனது அப்பாவுக்கு விடுமுறைகிடைக்கவில்லை. இதனால் டெடி மிகுந்த வருத்தத்தில் இருந்தான்.
இதைக்கண்ட அவனது அம்மா அக்டோபர் 21-ம் தேதி உனது நண்பர்களையும் கூப்பிட்டு பெரிய பார்ட்டியாக வைத்து கொண்டாடலாம் என டெடியிடம் கூற, அவனும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டான். இதற்கிடையில் டெடியின் தந்தையும் ஊரிலிருந்து 18-ம் தேதி வந்துவிட்டார்.
இதனால் பிறந்தநாள் ஏற்பாடு தடபுடலாக நடந்தது. அந்த ஊரில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் பீட்ஸா+கேக் உள்ளிட்ட உணவு வகைகளுடன் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. டெடியின் அம்மா அவனது வகுப்பு நண்பர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார்.
சுமார் 32 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அன்று மாலை டெடி தனது பெற்றோர்களுடன் ரெஸ்டாரண்ட்டிற்கு சென்று காத்திருக்க ஆரம்பித்தான். பீட்ஸா உள்ளிட்ட உணவு வகைகள் தயாராக இருந்தன. ஆனால் ஒருவர் கூட வரவில்லை. சொல்லி வைத்தது போல ஒருவர் கூட வரவில்லை என்பதால், டெடியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது.
பீட்ஸாக்களுடன் டெடி தனியாக அமர்ந்திருந்ததைப் பார்த்த அவனது அம்மா, இதனைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர அது வைரல் ஆனது. உலகம் முழுவதுமிருந்து டெடிக்கு வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்தது. மேலும் உள்ளூரில் உள்ள லோக்கல் தொலைக்காட்சிகள் மற்றும் ரேடியோ ஆகியவற்றிலும் இது ஒளிபரப்பானது.
இதனைப்பார்த்து ஃபீனிக்ஸ் என்ற கால்பந்து அணியினர் தாங்கள் நடத்தவிருக்கும் போட்டிக்கு நேரில் வருமாறு டெடிக்கு இலவச அழைப்பு விடுத்திருக்கிறார்கள். டெடி விளையாட்டு பிரியன் என்பதால் இந்த அழைப்பு அந்த குட்டி பையனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என அவனது அம்மா தெரிவித்திருக்கிறார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் குட்டிப்பையா!