'இனி ஒரிஜினல் தேவையில்லை'.. வாகன ஓட்டிகளுக்கு ஓர் நற்செய்தி!
Home > தமிழ் newsஇனி வாகனம் ஓட்டும்போது ஒரிஜினல் லைசென்ஸ் தேவையில்லை, என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன், மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப் போக்குவரத்துத் துறை சார்பில், மாநில அரசுகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், வாகன ஓட்டிகள் கட்டாயம் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
அதே அறிக்கையில், டிஜிட்டல் முறையில் ஆவணங்களைச் சேமித்துப் பயன்படுத்தலாம் என்று, இன்னொரு ஆப்ஷனும் அதில் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் பல இடங்களில் டிஜிட்டல் லைசென்ஸ்களை போக்குவரத்து அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை என, வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,''இனிமேல் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் இதர ஆவணங்களைக் கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. டிஜிட்டல் முறையில் வைத்திருந்தாலே போதுமானது. அதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும்,''என்று உத்தரவிட்டனர்.
டிஜிட்டல் ஆவணங்கள்:
கூகுள் பிளே ஸ்டோரில் டிஜிலாக்கர் என்னும் செயலி உள்ளது. இதனை டவுன்லோட் செய்து டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி.புக் போன்ற ஒரிஜினல் ஆவணங்களை ’ஸ்கேன்’ செய்து, அதில் சேகரித்து வைத்துக்கொள்ளலாம். ஆவணங்கள் சரிபார்ப்புக்கு, இதையே பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு ஆதார் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.