2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது: கண்டிப்புடன் உயர்நீதிமன்றம்!

Home > தமிழ் news
By |
2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது: கண்டிப்புடன் உயர்நீதிமன்றம்!

சில சமயம் பெரிய மாணவர்களைக் காட்டிலும் 1-ம், 2-ம் வகுப்பு பயிலும் பள்ளி குழந்தைகள்தான் அதிக புத்தகங்கள் சுமந்து செல்வதைக் காண முடிகிறது.  அத்தனை சிறு பால்யத்தில் பள்ளிகளால் கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்கள் இளம் வயதிலேயே அவர்களின் துடிப்பினை முடக்குவதாலும், மன அழுத்தத்தை அளிப்பதாலும், அவர்களுக்காக இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்கள்.

 

அதன்படி, 2-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என்று தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுப்பட்டுள்ளது. இதே உத்தரவு முன்னதாக பலமுறை பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், முறையாக பின் தொடரப்படுவதில்லை என்று எழுந்த புகாரை அடுத்து மீண்டும் இந்த உத்தரவானது தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த உத்தரவானது உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், அதாவது 2-ம் வகுப்பு வரையில் குழந்தைகள் வீட்டுப்பாடம் கொடுக்கப்படக் கூடாது என்கிற உத்தரவு ஆணை, தலைமை கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் தெரியப்படுத்தப்படுவதற்காக, பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SCHOOLSTUDENT, MADRASHIGHCOURT, HOMEWORK, TAMILNADU