யோகா வீடியோவிற்கு நாங்கள் செலவு செய்யவில்லை...பிரதமர் அலுவலகம் விளக்கம் !

Home > தமிழ் news
By |
யோகா வீடியோவிற்கு நாங்கள் செலவு செய்யவில்லை...பிரதமர் அலுவலகம் விளக்கம் !

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் ஃபிட்னஸ் சேலஞ்சை ஏற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தான் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டார்.மோடியின் வீடியோ அந்த நேரத்தில் மிகவும் வைரல் ஆனது.நெட்டிசன்களும் வீடியோவை பல வழிகளில் எடிட் செய்து வெளியிட்டார்கள்.

 

இந்த சூழலில், பிரதமர் யோகா செய்யும் வீடியோவை தயாரிக்க 35 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக, காங்கிரஸ் எம்பி சசி தரூர் குற்றம்சாட்டியிருந்தார்.இது மிகவும் சர்ச்சையை கிளப்பியது.எதிர் கட்சிகளும் ஒரு வீடியோ எடுக்க இவ்வளவு செலவா என மிக கடுமையான விமர்சனத்தை வைத்தார்கள்.

 

இந்த நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்திடம் தகவல் கேட்கப்பட்டது. அதற்கு பிரதமர் அலுவலக ஒளிப்பதிவாளரை கொண்டே அந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும் இதற்கென தனிப்பட்ட முறையில் செலவு எதுவும் செய்யவில்லை என்றும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

NARENDRAMODI, RTI, FITNESS CHALLENGE