Looks like you've blocked notifications!

பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.  அவர் மீது 3 பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

போலீசாரின் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.  சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கை தற்போது விசாரித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில், சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்களில், நிர்மலா தேவியின் வாட்ஸ்அப் சாட்டிங்கைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

அதில் 'கண்ணுங்களா டீம் பார்ம் பண்ணுவோமா' என்று ஆரம்பிக்கும் அந்த வாட்ஸ்அப் உரையாடல், 'வெற்றிக்கு திறமை மட்டும் போதாது, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் புத்திச்சாலித்தனமாக செயல்பட வேண்டும்' என்று நீள்கிறது.

 

மேலும், நான் சொல்வது உங்களுக்குப் புரிந்தால், குட் மார்னிங் என்று ஆங்கிலத்தில் கேப்பிட்டலில் எனக்கு மெஸேஜ் அனுப்பவும். படிப்பிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உங்களுக்கு நான் வழிகாட்டுவேன். வாட்ஸ்அப் டி.பி-யில் உங்களின் அழகான புகைப்படங்களை வையுங்கள்,'' என பல்வேறு வழியிலும் நிர்மலா தேவி மாணவிகளை மூளைச்சலவை செய்கிறார். இதற்கு மாணவிகள் தங்கள் எதிர்ப்பை பதிலாக அளித்துள்ளனர்.

 

மேலும், அதிர்ஷ்டம் கதவை தட்டும்போது தவறவிட வேண்டாம் என்றும், இந்தத் தகவலை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்' என்றும் நிர்மலாதேவி  அட்வைஸ் செய்துள்ளார். இதுபோல பல வாட்ஸ்அப் உரையாடல்கள் போலீஸ் கையில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.

 

எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்திட, போலீசார் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

BY MANJULA | APR 19, 2018 2:16 PM #NIRMALADEVI #WHATSAPP #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS