Looks like you've blocked notifications!

தமிழகம் முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் செல்போனில் அட்ஜஸ்ட்மெண்டுக்கு அழைக்கும் ஆடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இதைத்தொடர்ந்து நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும் என்று, மாணவர்களும் மாதர் சங்கங்களும் கல்லூரி முன்பு போராட்டம் நடத்தின. தொடர்ந்து, கல்லூரி முதல்வரின் புகாரின் பேரில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

நேற்று வீட்டை உடைத்து நிர்மலா தேவியை அதிரடியாகக் கைது செய்த போலீசார், நேற்றிரவு முதல் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஆனால் தான் சாதாரணமாகப் பேசியதை சிலர் தப்பான அர்த்தத்தில் புரிந்து கொண்டு பரப்பி விட்டார்கள்' என விசாரணையில், திரும்பத்திரும்ப நிர்மலா தேவி போலீசாரிடம் கூறி வருகிறாராம்.

 

இதற்கிடையில் நிர்மலா தேவியின் 2 செல்போன்களைக் கைப்பற்றிய போலீசார், அதில் பல முக்கிய வி.ஐ.பி-க்களின் செல்போன் எண்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனராம்.

 

இந்தநிலையில், பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதில், வழக்கின் முக்கியத்துவம் கருதி அருப்புக்கோட்டை நகரக் காவல்நிலையத்திலிருந்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு வழக்கு மாற்றப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

BY MANJULA | APR 17, 2018 4:08 PM #NIRMALA DEVI #MADURAI #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS