தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிர்மலாதேவி வழக்கில் இருந்து, அவரது வழக்கறிஞர் திடீரென விலகியிருக்கிறார். இது பெருத்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

 

பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

போலீசாரின் விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கை தற்போது விசாரித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், அவரது வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் திடீரென இந்த வழக்கில் இருந்து விலகியிருக்கிறார்.

 

தனிப்பட்ட விருப்பத்தின்பேரில் இந்த வழக்கிலிருந்து விலகுவதாகவும், இதற்கு யாருடைய நிர்ப்பந்தமும் காரணம் கிடையாது என்றும் பாலசுப்பிரமணியன் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

நிர்மலா தேவியை சிறையில் சந்தித்துப் பேசிய பிறகே, இந்த வழக்கில் இருந்து பாலசுப்பிரமணியன் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | APR 20, 2018 5:39 PM #NIRMALADEVI #ADVOCATE #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS