பச்சிளம் குழந்தையை துப்பட்டாவால் சுற்றி, ரயிலின் கழிவறையில் விட்டுச்சென்ற கொடூரம்!

Home > தமிழ் news
By |
பச்சிளம் குழந்தையை துப்பட்டாவால் சுற்றி, ரயிலின் கழிவறையில் விட்டுச்சென்ற கொடூரம்!

பிறந்து ஒரு நாள் கூட ஆகாத நிலையில், பச்சிளம் குழந்தையை, விரைவு ரயிலின் கழிவறையில் யாரோ விட்டுச் சென்றுள்ள சம்பவம் அமிர்தசரஸில் பெரும் அதிர்வலைகளை உண்டுபண்ணியுள்ளது. நேற்று முன்தினம் ரயில்வே துப்புரவு பணியாளர்கள்,  ஹவ்ரா விரைவு வண்டியில் உள்ள ஏசி கம்பார்ட்மெண்ட்டின் டி-3  கழிவறையில் இருந்து துப்பட்டா முனை ஒன்று வெளியே நீட்டிக்கொண்டிருந்ததைக் கண்டுள்ளனர். சந்தேகப்பட்டு கழிவறையை திறந்து பார்த்ததும், அங்கு ஒரு ஆண் குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

அதுவும் பிறந்து ஒரு நாளே ஆன நிலையில் அந்த குழந்தை, துப்பட்டாவால் கழுத்துப்பகுதி உட்பட இறுக்கமாக சுற்றப்பட்ட நிலையில் இருந்துள்ளதைக் கண்டதும் ஊழியர்கள் பதறிப்போயிருக்கின்றனர். பின்னர் துப்பட்டாவை இழுத்து, அதில் சுற்றப்பட்டிருந்த குழந்தையை பத்திரமாக வெளியே எடுத்துள்ளனர்.  அதனையடுத்து, காவலர்களின் உதவியோடு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்றுள்ளனர்.


இதுபற்றி பேசிய ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் பல்பிர் சிங், ஏறக்குறைய 4 மணி நேரமாக அந்த குழந்தை கடுமையான குளிரிலும் உயிருடன் இருந்துள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்ததாகவும், தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும், மேலும் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீஸார்  பச்சிளம் குழந்தையை இவ்வாறு இரக்கமின்றி விட்டுச் சென்றது பெற்றோரா, கடத்தல்வாதிகளா என்பன போன்ற தகவல்களை விசாரித்து கண்டுபிடிக்க போவதாகவும் கூறினார்.

TRAIN, RAILWAY, RAILTOILET, NEWBORNBABY, BABYSAVED