10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் புதிய முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, மாணவர்களின் தேர்வு முடிவுகளை பள்ளிகளுக்கான இ-மெயிலில் நேரடியாக அரசுத் தேர்வுத்துறை இந்த ஆண்டு வெளியிடுகிறது.

 

புதிய முறை மூலம் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.மூலமும், பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


தேர்வு முடிவுகளை  முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதியன்றும், 10-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதியன்றும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | MAY 9, 2018 7:58 PM #TAMILNADU #PUBLICEXAMS #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS