அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா நடிப்பில் உருவாகியிருக்கும் தமிழ்படம் 2 படத்தின் அறிமுகப்பாடலை நேற்று படக்குழு வெளியிட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை கலாய்த்து வெளியான இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

இந்த நிலையில் தமிழ்படம் 2 பாடல்களை நாளை மறுநாள் மாலை 5 மணியளவில் வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதில், " எங்கள் இசை உங்களை நோக்கி. ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது,'' என தெரிவித்துள்ளனர்.

 

நேற்று வெளியான அகில உலக சூப்பர்ஸ்டார் சிவாவின் ஓபனிங் பாடலை இதுவரை, 12,51,992 பேர் யூ டியூபில் பார்த்து ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BY MANJULA | JUN 27, 2018 12:03 PM #TAMILPADAM2 #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS