'நெனச்சா அள்ளிட்டு வர்றதுக்கு மண்ணுன்னு நெனைச்சியா'... மலை டா அண்ணாமலை!

ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை ருசித்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

 

ஐபிஎல் அணிகளில் 'சீனியர் அணி' என்றும் 'அங்கிள்ஸ்' என்றும் சென்னை அணியை கலாய்த்தவர்களுக்கு, தங்களது தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் சென்னை அணி பதிலடி கொடுத்து வருகிறது.

 

இந்த நிலையில், சென்னை அணியின் வெற்றி குறித்து சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் ''வாட்சனிடம் இருந்து என்ன ஒரு அற்புதமான ஆட்டம். சென்னையில் இருந்து பல வழிகளிலும் பயணம் செய்து வந்து புனேவில் எங்களுக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி. 

 

நெனச்சா அள்ளிட்டுப் போறதுக்கு மண்ணுன்னு நெனைச்சியா மலை டா அண்ணாமலை. எடுடா வண்டிய போடுடா விசில,'' என்று தெரிவித்துள்ளார்.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS