தமிழகத்தில் 420 இடங்களில், 3200 ஆசிரியர்கள் நடத்தும் ’நீட்’ பயிற்சி!
Home > தமிழ் newsதமிழகத்தில் நீட் தேர்வு முதலில் ஒரு கல்வித் திட்டமாக அறிமுகமாகி, பின்னர் விவகாரத்துக்குரிய வழக்காகவே மாறியது. சிபிஎஸ்சி கல்விமுறை தொடங்கி பல்வேறு பிரச்சனைகளால் நீட் தேர்வுக்கு எதிர்ப்பும் ஆதரவும் வந்துகொண்டிருந்தன. இந்த திட்டத்தின் மீது தொடுத்த விமர்சன வழக்கில் ஏமாற்றம் அடைந்ததால் அனிதா என்கிற பள்ளி மாணவியும் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து இன்று மாலை முதல் தமிழ்நாட்டில் மொத்தம் 412 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களும் பயிற்சிகளும் தொடங்கப்படவுள்ளன. அவற்றில் காணொளி மூலம் பயிற்சி அளிப்பதற்காக 3200 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளன.