திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவருக்கு, கேரள மாநிலம் எர்ணாகுளத்தின் நாலந்தா பப்ளிக் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

 

அவருக்குத் துணையாக அவரது தந்தை கிருஷ்ணசாமியும் சென்றிருந்தார். கஸ்தூரி தேர்வெழுத சென்றபின் விடுதியில் தங்கியிருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

 

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதனையறிந்த ,முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக மாணவனின் தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவிட்டார்.

 

முதல் அமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கேரள அரசின் தலைமை செயலாளருடன் தொடர்பு கொண்டு பேசினார்.

 

அதன்பேரில் எர்ணாகுளம் சிட்டி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணசாமியின் உடல் அவரது மைத்துனர் அன்பரசன் என்பவரிடம் இன்று மாலை சுமார் 4 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது.

 

இறப்பு சான்றிதழுடன் ஒப்படைக்கப்பட்ட கிருஷ்ணசாமியின் உடலை அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் மற்றும் உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வருகின்றனர்.அநேகமாக, இன்றிரவு 11 மணியளவில் அவரது உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

BY MANJULA | MAY 6, 2018 6:20 PM #KRISHNASWAMY #NEET2018 #NEET #தமிழ் NEWS

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS