துப்புரவு தொழிலாளர் குடும்பத்தை.. நெகிழவைத்த நெட்டிசன்கள்!

Home > தமிழ் news
By |
துப்புரவு தொழிலாளர் குடும்பத்தை.. நெகிழவைத்த நெட்டிசன்கள்!

டெல்லியைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்  அணில் என்பவர் கடந்த வாரம், சட்பீர் கலா என்பவரது வீட்டிற்கு சாக்கடைக் கால்வாயை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, கயிறு ஒன்றை மட்டும் சட்பீர் அணிலுக்கு கொடுத்துள்ளார். இரவு 8 மணி வாக்கில் நடந்த இந்த துப்புரவுப் பணியின்போது சாக்கடைத் தொட்டிக்குள் இறங்கி வேலைபார்த்துக் கொண்டிருந்த அணிலின் கயிறு அறுந்து விழுந்ததால், அவரால் எழுந்து மேலே வரமுடியவில்லை.


தொடர்ச்சியாக அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், அவருக்கு அவரால் மூச்சினை இயல்பாக விடமுடியாத சூழல் ஏற்பட்டு அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து சட்பீர் கலாவை போலீசார் இருவேறு பிரிவுகளில் கைது செய்தனர்.  ஆனால் அணிலின் உயிரிழப்பு அவரது மனைவி ராணியையும், அவரது 4 மாத குழந்தை உட்பட, அவரது மூன்று குழந்தைகளையும் பாதித்தது. இதை பார்த்து சஞ்சலப்பட்ட சிலர் அணிலின் குடும்பத்தினரை புகைப்படம் எடுத்து, வங்கிக்கணக்குடன் இணையத்தில் பகிர்ந்து உதவி செய்ய நினைப்பவர்கள் செய்யலாம் என்று கோரியிருந்தனர்.


ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில், துப்புரவு தொழிலாளர் அணிலின் குடும்பத்தினருக்கு ஏறக்குறைய 50 லட்சம் ரூபாய் வரையில் பொது நபர்களால் வங்கிக் கணக்கின் மூலம் கிடைத்துள்ளது. இதை அறிந்து நெகிழந்த ராணி, அனைவருக்கும் நன்றி சொன்னதோடு,  இந்த தொகை தம் குழந்தைகளின் கல்விக்கும் எதிர்காலத்துக்கும் உதவும் என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

SOCIAL MEDIA, FUNDRAISE, DELHI, DRAINAGE