ஒரே நாடு..ஒரே தேர்தலுக்கான மசோதா விரைவில் !
Home > தமிழ் newsமக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.இது தேர்தல் செலவைக் குறைக்கும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் வல்லுநர்கள் என பலரும் கடும் எதிப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான மசோதா விரைவில் தயார் செய்யப்படும் என்று பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர்ராவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ண சாகர்ராவ்,நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் அரசியல் சாசன திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது. இந்த மசோதாவை விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலோ அல்லது சிறப்பு கூட்டம் கூட்டியோ மத்திய அரசு நிறைவேற்ற வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தெலுங்கானாவை பொறுத்தமட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்தினால், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று முதலமைச்சர் சந்திர சேகர ராவ் கணிப்பதாக கூறினார்.