'பேட்ஸ்மேன்ல மட்டும் இல்லீங்க'...மோசமான நடத்தையிலும்,நீங்க தான் 'நம்பர் ஒன்'...கோலியை வறுத்தெடுத்த பிரபல நடிகர்!

Home > தமிழ் news
By |
'பேட்ஸ்மேன்ல மட்டும் இல்லீங்க'...மோசமான நடத்தையிலும்,நீங்க தான் 'நம்பர் ஒன்'...கோலியை வறுத்தெடுத்த பிரபல நடிகர்!

இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி உலகின் சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமல்ல,மோசமான நடத்தைக்கும் அவர்தான் சொந்தக்காரர் என,பாலிவுட் நடிகா் நஸ்ருதீன் ஷா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 

கேப்டன் விராட் கோலி கிரிக்கெட் உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.பல கடுமையான சாதனைகளை கூட எளிதாக எட்டியவர்.விளையாட்டு உலகில் மிக சிறந்த 'பிட்னெஸ்' கொண்ட வீரர் என்ற பெருமை கூட அவருக்கு உண்டு.அதே வேளையில் மிக எளிதாக பல விமர்சனங்களுக்கும்,சர்ச்சைகளுக்கும் ஆளாகி கொள்பவர்.

 

இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அந்நாட்டு வீரா்களுடன்,மைதானத்தில் கோலி நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனங்களையும்,கண்டனத்தையும் எழுப்பியுள்ளது.இது போன்ற சம்பவங்களை குறித்து பிரபல பாலிவுட் நடிகா் நஸ்ருதீன் ஷா தனது முகநூல் பக்கத்தில்,கோலியை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

 

அதில் “விராட் கோலி உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரா் மட்டுமல்ல. உலகின் மோசமான நடத்தைக்கு சொந்தக்காரரும் கூட. அவரது விளையாட்டு திறமை, அவரது மோசமான நடவடிக்கைகளால் மறைந்துவிடுகிறது.மேலும் எனக்கு நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டா் பக்கத்தில், ரசிகா் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கையில், உங்களுக்கு அயல்நாட்டு வீரரை பிடித்திருந்தால் நீங்கள் ஏன் இந்தியாவில் இருக்கிறீா்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.கோலியின் இந்த பதில் கடும் சர்ச்சைக்கு உள்ளாகி இருந்தது.பலரும் அவரது கருத்தை கண்டித்திருந்தார்கள்.

 

இந்நிலையில் தன்னை ஒரு ரசிகருக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காக அந்த ரசிகரை நாட்டை விட்டு செல்லுங்கள் என கோலி கூறிய நிலையில்,அவரை விமர்சித்து நஸ்ருதீன் ஷா போட்ட பதிவில்  ''எனக்கு நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை'' என தெரிவித்திருப்பதன் மூலம் கோலியை,நஸ்ருதீன் ஷா மறைமுகமாக கிண்டலடித்து இருக்கிறார் என ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.

CRICKET, VIRATKOHLI, NASEERUDDIN SHAH