கொட்டும் மழையில் நனைந்தபடி 2 மணி நேரத்துக்கும் மேலாக சேவை புரிந்த போக்குவரத்துக் காவலருக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

 

மும்பையில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இரவு 8 மணியளவில் மும்பை கன்டிவில் பகுதியிலுள்ள அகுர்லி சாலையில் நந்தகுமார் இங்கல் என்ற போக்குவரத்துக் காவலர் போக்குவரத்தை சீர்செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மழை பெய்து,சாலைகளில் நீர் கரைபுரண்டோடியது. எனினும் கொட்டும் மழையில் நனைந்தபடியே, ரெயின் கோட் கூட அணியாத அந்தக் காவலர், போக்குவரத்தை சரிசெய்தார்.

 

சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாகப் பெய்த மழையில் நனைந்துகொண்டு, வாகன நெரிசல் ஏற்படாதவண்ணம் தன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். இதைக்கண்ட சிலர் அவரின் செயலை வீடியோவாக எடுத்து வெளியிட சமூக வலைதளங்களில் அது வைரலாகப் பரவி வருகிறது.

 

இதனைக்கண்ட நந்தகுமாரின் மேலதிகாரி அவரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். அதன்பிறகே நந்தகுமாருக்கு இந்த விஷயம் குறித்து தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS