வெள்ளத்தில் அடித்துச் 'செல்லப்பட்ட' தீயணைப்பு வீரர்கள்.. பரபரப்பு வீடியோ!

Home > தமிழ் news
By |
வெள்ளத்தில் அடித்துச் 'செல்லப்பட்ட' தீயணைப்பு வீரர்கள்.. பரபரப்பு வீடியோ!

திருச்சி அருகே முக்கொம்பில் உடைப்பு ஏற்பட்ட கதவணை பகுதியில் தண்ணீர் வெளியேறுவதை தடுக்க மணல் மூடைகளை அடுக்கி தண்ணீரானது காவேரி ஆற்றில் திருப்பிவிடும் பணி நடந்து வருகிறது.இந்த பணியில் கிட்டத்தட்ட 700க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த பணியானது  ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் நடுகரையிலிருந்து வடகரைக்கு செல்லும் அதிகாரிகள், தொழிலாளர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும், மீட்பு பணியில் ஈடுபடவும் திருச்சி கன்டோன்மென்ட் தீயணைப்பு வீரர்கள் எப்போதும் தயாராக இருந்து வருகிறார்கள்.

 

இதனிடையே நேற்று மதியம் 1.30 அளவில் இரு தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் பணியிலிருந்தவர்களை அழைத்து வருவதற்காக சென்றனர். தண்ணீரில் சென்றுகொண்டிருந்த போது படகு திடீரென நடுவழியில் நின்றது. இதனால் பதறி போன வீரர்கள் கரையில் இருந்தவர்களை நோக்கி உதவிக்கு அழைத்தார்கள்.அதற்குள்  படகானது தண்ணீரில் அடித்துத் சென்றது.

 

அதற்குள் தீயணைப்பு வீரர்கள் இருவரும் சாதுர்யமாக படகிலிருந்து தாவி உடைந்த மதகு தூணை சுற்றியுள்ள திண்டு பகுதியில் குதித்து உயிர் தப்பினர். மதகு உடைந்த இடிபாடுகள் நீரில் மூழ்கியுள்ளதால் அதில் ரப்பர்படகு சிக்கியது. அதை தொடர்ந்து மரப்படகின் மூலம் சென்ற மீட்பு படையினர், கயிற்றை தூக்கி வீசி இருவரையும் மீட்டனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RIVER, CAUVERY, TRICHY