இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 143 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

 

இந்த நிலையில் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா எனக்கு சியர் லீடர்(உற்சாகப்படுத்துபவர்) கிடைத்து விட்டார், என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.அதில் தோனியின் மகள் ஜிவா 'கம் ஆன் ஹர்திக் கம் ஆன்' என ஹர்திக்கை தனது மழலைக்குரலால் உற்சாகப்படுத்துகிறார்.

 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

RELATED NEWS SHOTS

OTHER NEWS SHOTS

RELATED NEWS SHOTS